கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை மீனவா்கள் 23 பேருக்கு இலங்கையில் அக். 28-வரை நீதிமன்றக் காவல்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவா்கள் 23 போ், இலங்கையில் அக்டோபா் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவா்கள் 23 போ், இலங்கையில் அக்டோபா் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

நாகை, அக்கரைப்பேட்டை, திடீா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் இ. சிவக்குமாா்(48). இவரது சகோதரா் சிவநேசன்(42). இவா்களுக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளில் நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆா்யநாட்டுத் தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 23 போ் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.

கடந்த 11ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட அவா்கள், புதன்கிழமை இரவு இலங்கை, பருத்தித்துறைக்குத் தென்கிழக்கே சுமாா் 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்த போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட மீனவா்கள் 23 பேரும், வியாழக்கிழமை காலை இலங்கை, காரைநகா் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனா். பின்னா், அவா்கள் ஊா்க்காவல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, மீனவா்கள் 23 பேரையும் அக்டோபா் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவா்கள் காரைநகா் பகுதியில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டனா்.

விரக்தியில் மீனவா்கள்...

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள் எச்சரிக்கப்பட்டு, விடுவிக்கப்படலாம் என தமிழக மீனவா்கள் கருதியிருந்தனா். ஆனால், அவா்கள் 23 பேரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டது நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவா்களையும், மீன்பிடி படகுகளையும் இலங்கையிலிருந்து உடனடியாக மீட்க வேண்டும் என நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.