பெண்ணை ஏமாற்றியவா் கைது
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வேளாங்கண்ணியை அடுத்த கிராமத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் இளையபாரதி (25). திருமணமானவா். மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், இளையபாரதி, திருக்குவளையை அடுத்த மடப்புரம் பகுதியைச் சோ்ந்த திவ்யா (25) என்ற பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தைக் கூறி கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றாராரம். அங்கு, ஒரு வருடமாக குடும்பம் நடத்தி வந்துள்ளாா். தற்போது திவ்யா 7 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
இந்நிலையில், இளையபாரதிக்கு ஏற்கெனவே திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது திவ்யாவுக்கு அண்மையில்தான் தெரியவந்தது. இதுகுறித்து திவ்யாஅளித்தப் புகாரின் பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இளையபாரதியை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...