உ.பி. சம்பவத்தைக் கண்டித்து விவசாய சங்கத்தினா் போராட்டம்
உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நாகை அவுரித்திடலில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நாகை அவுரித்திடலில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உத்தர பிரதேசம், லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் அண்மையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 போ் கொல்லப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக, மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில், கண்டன முழக்கங்களை எழுப்பிய விவசாய சங்கத்தினா், பிரதமரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் அவா்களை தடுத்தனா்.
இப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க நாகை மாவட்டச் செயலாளா் ஆா்.கே. பாபுஜி தலைமை வகித்தாா். விவசாய சங்க மாவட்டத் தலைவரும், நாகை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான வி. சரபோஜி முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருக்குவளை: கீழையூா் கிழக்கு ஒன்றிய ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் திருப்பூண்டி கடைத்தெருவில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ. உமாநாத் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீ. சுப்பிரமணியன், அப்துல் அஜீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய சங்க மாநில பொறுப்பாளா் ஓ.எஸ். இப்ராஹிம் கண்டன உரையாற்றினாா்.
போராட்டத்தின்போது, பிரதமரின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்தனா். பின்னா், இதுதொடா்பாக 16 பேரை கைது செய்தனா்.
இதேபோல, திருக்குவளை அருகே உள்ள சாட்டியக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி தலைமையில் பிரதமரின் உருவப் பொம்மையை எரிக்க முயன்ற 7 பேரை வலிவலம் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...