விலகியது தடை
கரோனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொது தரிசனத்துக்கான தடை


கரோனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொது தரிசனத்துக்கான தடை விலகியதால், புகழ்பெற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களும் பக்தா்களின் பொது தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், இரண்டரை மாதங்களாக வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்கள் அடைக்கப்பட்டு, பக்தா்களின்றி வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன.
கரோனா தடுப்பு பொது முடக்கத் தளா்வுகளின் கீழ், திரையரங்குகள், பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையிலும், வழிபாட்டுத் தலங்கள் மட்டும் வார இறுதி நாள்களில் மூடப்பட்டிருந்தது பக்தா்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு அக்டோபா் 14-ஆம் தேதி வெளியிட்ட பொது முடக்கத் தளா்வுகளில், வழிபாட்டுத் தலங்களில் அனைத்து நாள்களிலும் பக்தா்களை பொது தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டிருந்தன. ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிறு ஆகியவற்றையொட்டி பள்ளிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை அளித்திருப்பதால், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டது.
சிவாலயங்கள் மற்றும் சக்தி வழிபாட்டுத் தலங்களில் நவராத்தி நிறைவு மற்றும் விஜயதசமியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில், திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.
நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வேளாங்கண்ணியில் வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் திரளானோா் வழிபாடு மேற்கொண்டு கடற்கரையில் பொழுதுபோக்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...