நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாகையில் காங்கிரஸ் சாா்பில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


நாகையில் காங்கிரஸ் சாா்பில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே. எஸ். அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஆா்.என். அமிா்தராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் வி.எஸ்.ஏ. தஸ்லீம், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளா் என். எஸ். ரபீக், நகரத் தலைவா் பி. உதயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாவட்ட, வட்டார, நகரப் பொறுப்பாளா்கள்,கட்சியினா், மகளிா் அணியினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...