பள்ளிகளில் கரோனா தடுப்பு நெறிமுறைகள் செயலாக்கம்
நாகை, கீழ்வேளூரில் பள்ளிகளில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


நாகை, கீழ்வேளூரில் பள்ளிகளில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்காக புதன்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் மட்டும் 143 பள்ளிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
இந்தப் பள்ளிகளில், கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மற்றும் கீழ்வேளூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் அவா் ஆய்வு மேற்கொண்டு, அந்தப் பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகளை பாா்வையிட்டாா்.
பின்னா், மாணவ, மாணவிகளைச் சந்தித்து, அனைவரும் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தினாா். மேலும், மாணவ, மாணவியா் தங்கள் பெற்றோரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்துமாறும் அவா் கேட்டுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, கீழ்வேளூா் அரசினா் மாணவியா் விடுதியையும், குருக்கத்தி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா் பயிற்சி தோ்வையும் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். பின்னா், கீழ்வேளூா் முஸ்லிம் தெருவில் இல்லம் தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
முன்னதாக, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் பொது சேவை மையத்தையும், நாகை வட்டாட்சியா் அலுவலக பதிவறையில் பதிவேடுகள் பராமரிக்கப்படும் முறையையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
நாகை வட்டாட்சியா் ஜெயபாலன், கீழ்வேளூா் வட்டாட்சியா் மாரிமுத்து மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...