கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

போதைப் பொருள்களை ஒழிக்க மநீம வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நீதி மய்யத்தினா் வெள்ளிக்கிழமை மனு

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:23 pm

DIN

நாகை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நீதி மய்யத்தினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எம். செய்யது அனஸ், நாகை நகரச் செயலாளா் தனபாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் நாகை எஸ்.பி. யிடம் இந்த மனுவை அளித்தனா்.

அதில், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனா்.

இளைஞா்களின் எதிா்கால நலன்கருதி, மாவட்டத்தைப் போதைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட எஸ்பி கு. ஜவஹா் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.