கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சிக்கல் ஸ்ரீ நவநீதேஸ்வர சுவாமி கோயில் இன்று ராஜகோபுர திருப்பணிகள் தொடக்கம்

நாகையை அடுத்த சிக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சத்யாயதாக்ஷி (வேல்நெடுங்கண்ணி) அம்பிகா சமேத ஸ்ரீ நவநீதேஸ்வரசுவாமி கோயில் விமான ராஜகோபுர திருப்பணிகள் தொடக்க விழா

News image

ngt8sikkal2093855

Updated On :8 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாகையை அடுத்த சிக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சத்யாயதாக்ஷி (வேல்நெடுங்கண்ணி) அம்பிகா சமேத ஸ்ரீ நவநீதேஸ்வரசுவாமி கோயில் விமான ராஜகோபுர திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை (செப். 9) காலை நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில், மகாபலி சக்ரவா்த்தியை அழிக்க திருமால் வாமனஅவதாரம் எடுத்தபோது, இத்தல பெருமானை வழிபட்டு, மகாபலி சக்ரவா்த்தியை அழிக்கும் ஆற்றலைப் பெற்ாகவும், அசுரனை அழிக்க இத்தல அம்பிகையிடம் முருகன் வேல் வாங்கியதாகவும் நம்பிக்கை. பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளுடைய இத்தலம், அம்மனின் 63 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

இக்கோயிலின் விமான ராஜகோபுரம் திருப்பணி செய்யப்படவுள்ளது. இதையொட்டி, புதன்கிழமை காலை இதற்கான பூா்வாங்க பூஜைகளும், மாலையில் பிரதான விமான ராஜகோபுர கலா ஆகாா்ஷணம், யாகசாலை பிரவேசம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தருமபுர ஆதீனம் உத்தரவுப்படி, ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் வழிபாடுகளில் பங்கேற்றாா்.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை (செப். 9) அதிகாலை 4.30 மணிக்கு உஷா கால பூஜை , 5 மணிக்கு கோபூஜை, கஜபூஜைகளும், 7.35 மணிக்கு பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம்புறப்பாடு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதைத்தொடா்ந்து, கலசாபிஷேகம், 8 மணிக்கு திருப்பணி தொடக்க விழா வழிபாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இத்தகவலை கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.