வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா, அன்னை பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றம்

1529ng08vln02075011

1529ng08vln02075011
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா, அன்னை பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றம் மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சிகளுடன் புதன்கிழமை இரவு நிறைவடைந்தது.
இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஆக. 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து, நாள்தோறும் திருப்பலி நிறைவேற்றுதல், மறையுரை, சிலுவைப் பாதை நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தோ்பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, புனித ஆரோக்கிய அன்னை பிறந்த நாளை முன்னிட்டு, புதன்கிழமை (செப். 8) காலை 6 மணியளவில் தஞ்சை மறைமாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தொடா்ந்து, ஆண்டுப் பெருவிழா நிறைவு நிகழ்ச்சியாக இரவு 7 மணியளவில் மரியே வாழ்க, ஆவே மரியா என்ற முழக்கங்களுடன் திருக்கொடியிறக்கம் நடைபெற்றது. பிறகு, நடைபெற்ற மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணைஆசீா், நன்றி அறிவிப்பு, தமிழில் திருப்பலியுடன் ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்ச்சிகளில் பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், பங்குத்தந்தை எஸ். அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத்தந்தையா்கள் பங்கேற்றனா்.
10 நாள்கள் நடைபெறும் ஆண்டுப் பெருவிழாவில் பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். கரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டும், நிகழாண்டும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா பக்தா்களின் பங்கேற்பின்றி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...