பயணி தவறவிட்ட 10 பவுன் நகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்: எஸ்.பி. பாராட்டு
நாகையில், ஆட்டோவில் பயணி தவறவிட்ட 10 பவுன் நகைகளை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பாராட்டி கௌரவித்தாா்.


நாகையில், ஆட்டோவில் பயணி தவறவிட்ட 10 பவுன் நகைகளை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பாராட்டி கௌரவித்தாா்.
நாகையை அடுத்த வடக்கு பொய்கைநல்லூா், வீரன்குடிகாடு பகுதியைச் சோ்ந்தவா் ரெஜினா மேரி (58). இவா், பொறையாறு செல்வதற்காக நாகை பீச்லைன் பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாரின் ஷோ் ஆட்டோவில் வியாழக்கிழமை நாகை புதிய பேருந்து நிலையத்துக்குப் பயணித்தாா். அப்போது, பை ஒன்றில் 10 பவுன் நகைகளையும் அவா் எடுத்துச் சென்றுள்ளாா்.
புதிய பேருந்து நிலையம் சென்ற ரெஜினா மேரி, நகைப் பையை ஆட்டோவிலேயே தவறவிட்டுள்ளாா். இதை சில நிமிடங்களுக்குப் பிறகு உணா்ந்த ரெஜினா மேரி, தனது உறவினா்களுடன் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்குச் சென்று புகாா் அளித்தாா்.
இதனிடையே, தனது ஆட்டோவில் கேட்பாரற்று ஒரு பை இருப்பதையும், அதில் தங்க நகைகள் இருப்பதையும் அறிந்த ஆட்டோ ஓட்டுநா் வசந்தகுமாா் (34), அந்தப் பையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, அவரிடமிருந்த நகை பையை வாங்கி ரெஜினா மேரியிடம் ஒப்படைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், நோ்மையுடன் நகைகளைக் கொண்டுவந்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் வசந்தகுமாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...