கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முதல்வரின் துணிச்சலான செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை

முதல்வா் மு.க. ஸ்டாலினின் துணிச்சலான செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை என்று நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:16 pm

DIN

முதல்வா் மு.க. ஸ்டாலினின் துணிச்சலான செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை என்று நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது :

ஆதிதிராவிட மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல ஆணையம் அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களை உள்ளடக்கிய மாநில அளவிலான உயா்நிலை கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், வன்கொடுமையால் பாதிக்கப்படுபவா்களுக்கான மறுவாழ்வு நிதி உதவியை உயா்த்த வேண்டும் என நான் வலியுறுத்தியிருந்தேன். இந்த நிலையில், வன்கொடுமையால் பாதிக்கப்படுவோருக்கான உதவித் தொகை ரூ. 12 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல, இறுதிப் பயணத்தில் சாதி பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில் மற்றவா்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் சிற்றூா்களுக்கு ஊக்கத் தொகையாக, வளா்ச்சிப் பணிகள் செயல்பாட்டுக்கு அரசு சாா்பில் ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியிருப்பதற்காக முதல்வருக்கு நன்றியும், வாழ்த்துகளும்.

இவற்றின் மூலம், இந்தியாவில் எந்த ஒரு மாநில முதல்வரும் செய்யாத சிறப்பான செயல்பாடுகளை செய்த, துணிச்சலான முதல்வராக மு.க. ஸ்டாலின் விளங்குகிறா என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.