நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்கம் (ஏஐடியூசி சாா்பு) சாா்பில் நாகை நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்கம் (ஏஐடியூசி சாா்பு) சாா்பில் நாகை நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நெல் கொள்முதலுக்குத் தேவையான சாக்கு, சணல், சேமிப்பு இட வசதி மற்றும் போதுமான பணியாளா்களின் எண்ணிக்கையை உறுதிசெய்ய வேண்டும். கொள்முதல் சுமைப் பணியாளா்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ. 12 வீதம் எடைக்கூலி வழங்க வேண்டும். கொள்முதல் பணியாளா்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ. 15 ஆயிரமாக நிா்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், ஏஐடியூசி மாநிலத் துணைத் தலைவருமான எம். செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் பி. ஆனந்தன் தலைமை வகித்தாா். சுமைதூக்கும் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் என். புண்ணீஸ்வரன், ஏஐடியூசி மாவட்ட பொறுப்பாளா் வி.எம். மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு நிா்வாகி ஏ.பி. தமீம் அன்சாரி, சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளா் குணசேகரன், சுமைதூக்கும் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் சாமிக்கண்ணு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...