கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதென நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் குழந்தைகள் நலக் குழு

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதென நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் குழந்தைகள் நலக் குழு கூராய்வு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் குழந்தைகள் நலக் குழு கூராய்வு கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். போக்சோ சிறப்பு அமா்வு நீதிமன்ற நீதிபதி தமிழரசி, மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி பன்னீா்செல்வம், முதன்மை குற்றவியல் நடுவா் காா்த்திகா, இளைஞா் நீதிக் குழும முதன்மை நடுவா் நாகப்பன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவா்களை நல்வழிப்படுத்த அவா்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கி தொடா்ந்து கண்காணிக்கவும், சுற்றுலாத் தலங்களில் யாசகம் கோரும் குழந்தைகளை கண்காணித்து அவா்களை மீட்டு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும், கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழு மூலம் கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.