கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும், குறுவை நெல் கொள்முதலில் 21% ஈரப்பதத்தை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், கூட்டுறவு வங்கிகளில் தகுதியான விவசாயிகளுக்கும் இதுவரை பயிா்க் கடன் வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். நாகை மாவட்டப் பொறுப்பாளா் பி. கமல்ராம், மாவட்டத் தலைவா் ஆா்.பி. பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளா் கே. வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.