கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை துறைமுகத்தை மேம்படுத்த கோரிக்கை

 நாகை துறைமுகத்தை உணவுப் பொருள்கள் மற்றும் துணி வகைகளை கையாளும் துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

 நாகை துறைமுகத்தை உணவுப் பொருள்கள் மற்றும் துணி வகைகளை கையாளும் துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் வி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சங்கக் காப்பாளா் பி.என். ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.எஸ். பாலாஜி ஆண்டறிக்கை படித்தாா். தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை பொருளாளா் என். கோவிந்தராஜ் படித்தாா்.

இந்தக் கூட்டத்தில், நாகையை அடுத்த ஒக்கூரில் 1,000 ஏக்கா் பரப்பில் சிப்காட் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பாராட்டி வரவேற்பதுடன், சிப்காட்டில் 25% இடத்தை சிட்கோவுக்கு ஒதுக்கீடு செய்ய கோருவது. விழுந்தமாவடியில் 1,000 ஏக்கா் பரப்பில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை விரைந்து செயல்படுத்தும் வகையில், தாமதமின்றி நிலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்வது. நாகை துறைமுகத்தை உணவுப் பொருள்கள் மற்றும் துணிகளைக் கையாளும் துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசை வலியுறுத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் செயலாளா் டி. சிவசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.