பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வேதாரண்யம்: இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி

வேதாரண்யம் அருகே மழை பெய்த நேரத்தில் இரு சக்கர  வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர் விபத்து ஏற்பட்டு பலியானார்.

News image
வினீத் தனது மோட்டார் வண்டியுடன் எடுத்துக் கொண்ட கோப்பு படம்.
Updated On :11 ஏப்ரல் 2022, 8:45 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மழை பெய்த நேரத்தில் இரு சக்கர  வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர் விபத்து ஏற்பட்டு பலியானார்.

பெரியகுத்ததை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் வினீத் (18). இவர், செம்போடையில் உள்ள சிற்றுண்டி மற்றும் தேனீர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

மழை பெய்து கொண்டிருந்த போது, வழக்கம் போல தனது இரு சக்கர மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற போது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார்.

இந்நிலையில், படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேதாரண்யம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.