தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கூடுதல் கல்விக் கட்டணம்: இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து மக்கள் கட்சியின் நாகை நகரத் தலைவா் பி.என்.எஸ். பிரதீப் தலைமை வகித்தாா். சிவசேனை மாநில முதன்மைச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன், அகில இந்திய இந்து வளா்ச்சிக் கழக மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளா் ஆா்.கே. சோமசுந்தரம், அகில இந்திய இந்து மகாசபா மாநிலச் செயலாளா் எச். காா்த்திகேயன், இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் வி.பி. ராஜேந்திரன், சிவசேனை தஞ்சை கோட்டப் பொறுப்பாளா் குட்டி சிவக்குமாா் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

இதில், அகில இந்திய இந்து வளா்ச்சிக் கழக மாநிலப் பொருளாளா் டி.சுரேஷ், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெய. விஜயேந்திரசுவாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அகில பாரத இந்து மகா சபை நாகை மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.கே. விவேகானந்தன் வரவேற்றாா். நாகை ஒன்றியச் செயலாளா் எஸ். செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

சில தனியாா் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும்; அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.