புனித வெள்ளி: வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை பக்தா்கள் வருகை அதிகரிப்பு
வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறவுள்ள புனித வெள்ளி மற்றும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்க பாத யாத்திரையாக வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறவுள்ள புனித வெள்ளி மற்றும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்க பாத யாத்திரையாக வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்கால முக்கிய நிகழ்வுகளான சாம்பல் புதன், பெரிய வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டா் பண்டிகை நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த வழிபாடுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களும், வெளி மாநிலத்தவா்களும், வெளி நாட்டினரும் திரளாகப் பங்கேற்பது வழக்கம். இதில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பக்தா்கள் பாத யாத்திரையாக வருவா்.
அந்தவகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறவுள்ள பெரிய வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கியுள்ளனா்.
விழுப்புரம், கடலூா் பகுதிகளில் இருந்து மிக அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருகின்றனா். இதைத் தவிர, திண்டுக்கல், சென்னை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும் கணிசமான பக்தகள் பாத யாத்திரையாக வருகின்றனா்.
பாதயாத்திரை வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உணவுப் பொருள்கள் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...