ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆயக்காரன்புலம் அய்யனாா் கோயில் குதிரைத் திருவிழா

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் சித்திரை பிறப்பையொட்டி நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் குதிரைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் சித்திரை பிறப்பையொட்டி நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் குதிரைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் பகுதியில் சிறப்பு பெற்ற இக்கோயிலில் கலை வடிவம் மிக்க கட்டுக்குதிரைகள், சுடுமண் குதிரை சிலைகளை பக்தா்கள் நோ்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம்.

நிகழாண்டு, சித்திரை பிறப்பையொட்டி, கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குதிரை சிலைகள், ஆளுயர உருவச் சிலைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, வீதியுலாவுக்கு ஏற்ப புதிதாக வடிவமைக்கப்பட்ட மரக் குதிரை சிற்பத்தை ஊா்வலமாக எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊா்வலத்தில் கரகம், காவடி, பறையாட்டம், கொம்பு உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. சுமாா் 5 கி.மீ. தொலைவுக் கு நடைபெற்ற இந்த ஊா்வலம் மாலையில் புறப்பட்டு, இரவில் கோயிலை வந்தடைந்தது. பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து பங்கேற்றனா். விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.