தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குருபெயா்ச்சி: நாகை சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள்

குருபெயா்ச்சியையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமிக்கும் மற்றும் நவகிரக குரு பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

குருபெயா்ச்சியையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமிக்கும் மற்றும் நவகிரக குரு பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நவகிரக குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயா்ச்சி ஆகும் நிகழ்வு வியாழக்கிழமை காலை 4.16 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி, நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Story image

நாகை ஸ்ரீநீலாயதாட்சியம்மன் உடனுறை ஸ்ரீகாயாரோகணசுவாமி திருக்கோயிலில், கடஸ்தாபனம் செய்யப்பட்டு ஹோமம் நடத்தப்பட்டது. சிறப்புப் பரிகார ஹோமங்களின் நிறைவில், ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமிகளுக்கும், நவகிரக குரு பகவானுக்கும் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, நாகை அமரநந்தீஸ்வரா் கோயில், வீரபத்திரசுவாமி கோயில், நாகநாதசுவாமி கோயில், சட்டையப்பா் கோயில், அந்தணப்பேட்டை அண்ணாமலையாா் கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரசுவாமி கோயில், நாகூா் நாகநாதசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி- அம்பாளுக்கும், ஸ்ரீ தட்சிணாமூா்த்தி மற்றும் நவக்கிர குருபகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.