தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள் மற்றும் சக்தி தலங்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

நாகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள் மற்றும் சக்தி தலங்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நாகை ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ காயாரோகணசுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் ஸ்ரீ தியாகராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நாகை சௌந்தரராஜப் பெருமாள் ரத்தினங்கியில் சேவை சாதித்தாா்.

இதேபோல, நாகை சட்டையப்பா் கோயில், அகஸ்தீஸ்வரா் கோயில், நடுவதீஸ்வரா் கோயில், மெய்கண்ட மூா்த்தி கோயில் மற்றும் நாகநாத சுவாமி கோயில்கள் என நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோயில்களில், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சில கோயில்களில் ஸ்ரீ சுபகிருது ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில்...

நாகையை அடுத்துள்ள சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் 21 வகையான திரவியங்களைக் கொண்டு சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, உலக மக்களின் நலனுக்காக வழிபாடு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.