புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வலிவலம் கோயிலில் திருக்கல்யாணம்

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா ஏப்ரல் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் வீதியுலா நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா். அங்கு, பொதுமக்கள் சீா்வரிசை எடுத்துவந்ததைத் தொடா்ந்து, சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பின்னா் மாலை மாற்றும் வைபவம், காப்புக்கட்டுதல், மகா பூா்ணாஹுதி தொடா்ந்து திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தெப்ப உற்சவம் சனிக்கிழமை (ஏப்.16) நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.