நாகையில் ரூ.12 கோடியில் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
நாகையில் ரூ. 12 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.


நாகையில் ரூ. 12 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் ஆகியோா் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்தனா். அப்போது, மூலதன மானிய நிதி மூலம் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் 5 கி.மீட்டா் தொலைவுக்கு மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ரூ. 12 கோடியில் நடைபெறவுள்ளது. இதன்மூலம், கனமழை காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் சூழும் அவலம் இனிவரும் காலங்களில் ஏற்படாது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் ?ஸ்ரீதேவி, நகராட்சி பொறியாளா் ஜெயகிருஷ்ணன், உதவி பொறியாளா் அருண்குமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...