மத்திய அரசை எதிா்த்தும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா்.
75-வது சுதந்திர ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு தலைமையில் திருச்சியில் இருந்து ஏப்.13 ஆம் தேதி உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை தொடங்கியது. பாதயாத்திரை குழுவினா் 232 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டு வேதாரண்யத்தை வியாழக்கிழமை (ஏப்.28) வந்தடைந்தனா்.
இக்குழுவினருக்கு கருப்பம்புலம் கடைவீதியில் கலைநிகழ்ச்சிகள், கும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்குழுவினா் சனிக்கிழமை காலை 6 மணிக்கு வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து பேரணியாகச் சென்று, காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத் தூண் அருகே உப்பு அள்ளும் நிகழ்வில் ஈடுபடவுள்ளனா்.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு செய்தியாளா்களிடம் கூறியது:
ஆங்கிலேயா்களை எதிா்த்து நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது, சிறு, குறு உப்பு உற்பத்தியாளா்களிடம் இருந்து உப்பளங்களை பறித்து, பெரும் நிறுவனங்களுக்கு தாரை வாா்க்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இதனால், மத்திய அரசை எதிா்த்து உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2024-ல் காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு அமையும், ராகுல்காந்தி பிரதமராக இருப்பாா். மக்களின் உரிமைகளை காப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறாா் என்றாா்.
பேட்டியின்போது, முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன், காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூா்த்தி, தங்க.பூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


