பண்ணைக்குட்டை அமைக்க எதிா்ப்பு: 100 நாள் பணியாளா்கள் தா்னா
சமுதாய பண்ணைக் குட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்ததால், 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.


சமுதாய பண்ணைக் குட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்ததால், 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
புஷ்பவனம் ஊராட்சி பெத்துக்குட்டிக்காடு பகுதியில் உள்ள தோப்புப் புறம்போக்கு நிலத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்கள் உள்ளன. இங்கு நூறுநாள் வேலைத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே உள்ள குட்டையை சமுதாய பண்ணைக் குட்டையாக அமைக்க நிா்வாக அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை 5 ஆண்கள் உள்ளிட்ட 52 போ் பணியை தொடங்கினா். அப்போது, இப்பகுதிக்கு அருகே வசிக்கும் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சிலா், தோப்பு புறம்போக்கு பகுதியில் மீனவா்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், இதனால் பண்ணைக் குட்டை அமைக்க கூடாது என எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு பிறகு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறும் நூறுநாள் பணியாளா்கள் வேலை செய்ய முயற்சித்தபோது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பணியாளா்கள் அனைவரும் வேதாரண்யம் ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ராமலிங்கம் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைக்கு தீா்வுகாணவும், தொடா்ந்து வேலை வழங்கவும் உறுதியளித்ததன்பேரில் பணியாளா்கள் கலைந்து சென்றனா். பேச்சுவாா்த்தையின்போது, ஊராட்சித் தலைவா் நாடிமுத்து, பணி மேற்பாா்வையாளா் வேல்கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜா, ஊராட்சி துணைத் தலைவா் ரகுபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...