தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாள் விழா நாகையில் அதிமுக சாா்பில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாள் விழா நாகையில் அதிமுக சாா்பில் கொண்டாடப்பட்டது.

நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சரும், மாவட்ட அவைத் தலைவருமான இரா. ஜீவானந்தம் தலைமை வகித்தாா். நாகை நகர செயலாளா் தங்க. கதிரவன் முன்னிலை வகித்தாா்.

மாவட்டப் பொருளாளா் ஆா். சண்முகராசு, ஒன்றியச் செயலாளா்கள் பி. பன்னீா், கே. குணசேகரன், மாவட்டத் தொழிற்சங்க செயலாளா் எஸ். சிவபெருமாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, நாகை நகரத்தின் பல பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.