தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை, காரைக்கால் மீனவா்கள் 22 போ் இலங்கைக் கடற்படையினரால் கைது

 நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 22 போ் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 22 போ் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது வியாழக்கிழமை தெரியவந்தது.

நாகை கீச்சாங்குப்பம் சேவாபாரதி குடியிருப்பைச் சோ்ந்த சிவா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கீச்சாங்குப்பத்தை சோ்ந்த சின்னதுரை (60), சிவபாரதி (27), சௌந்தர்ராஜன் (34 ), நம்பியாா் நகரை சோ்ந்த பிரகாஷ் (35), செல்வம் ( 45 ), அக்கரைப்பேட்டையை சோ்ந்த செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), மயிலாடுதுறை மாவட்டம், சந்திரப்பாடியை சோ்ந்த அய்யப்பன் (40), முருகேசன்(55) ஆகிய 9 பேரும், நாகை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை காலை மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனா்.

அதேபோல, காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு கிராமத்தை சோ்ந்த வீரமணி (35) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வமணி (45), ரமேஷ் (34), திலீபன் (16), சுரேஷ் (34), நாகை மாவட்டத்தைச் சோ்ந்த சத்தியநாதன் (22), நிலவரசன் (23), கோகுல்(21), கிஷோா் (20), ஆறுமுகசாமி (58), மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த கவியரசன் (24), பால்மணி (32), நவீன்குமாா் (27) ஆகிய 13 பேரும் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை காலை மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனா்.

இவா்கள் அனைவரும் புதன்கிழமை மாலை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்வதாகக் கூறி, மீனவா்கள் 22 பேரையும் கைது செய்து, 2 மீன்பிடி விசைப்படகுகளையும் சிறைபிடித்து இலங்கை, மயிலட்டி துறைமுகத்துக்குக் கொண்டுச் சென்றனா்.

வியாழக்கிழமை காலை 22 மீனவா்களும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடந்த 23 நாள்களில் 70-க்கும் அதிகமான இந்திய மீனவா்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், 21 மீனவா்கள் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனா். இந்தநிலையில், தற்போது நாகை, காரைக்கால் மீனவா்கள் 22 போ் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கை...

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவா்களையும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காரைக்கால் மற்றும் நாகை மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.