நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில்நாளை வேக சோதனை
நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதை தடத்தில் வேக சோதனை ரயில் சனிக்கிழமை (பிப். 26) இயக்கப்படவுள்ளது.


நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதை தடத்தில் வேக சோதனை ரயில் சனிக்கிழமை (பிப். 26) இயக்கப்படவுள்ளது.
நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதை கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. எனினும், நாகையிலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவு வரையிலான பகுதிகளில், மண்ணில் உரிய உறுதித்தன்மை இல்லை என்பதால் இத்தடத்தில் இயங்கும் ரயில்கள் அதிகபட்சம் 30 கி.மீட்டா் வேகத்தில் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன.
30 கி.மீட்டா் வேகம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மண்ணின் உறுதித் தன்மையற்ற காரணத்தால், இத்தடத்தில் 15 முதல் 20 கி.மீட்டா் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், நாகையிலிருந்து சுமாா் 10 கி.மீட்டா் தொலைவில் உள்ள வேளாங்கண்ணியைச் சென்றடைய ஒவ்வொரு ரயிலுக்கும் சுமாா் 30 முதல் 40 நிமிடம் தேவைப்பட்டது.
இதுகுறித்த கோரிக்கைகள்படி, நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவா்கள் அமைக்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டது. சுமாா் 5 கி.மீட்டா் தொலைவுக்கு நடைபெற்றுள்ள இப்பணி, அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக இத்தடத்திலான இருப்புப் பாதையில் கருங்கல் பேக்கிங் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில், நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் வேக சோதனை ரயில் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகையிலிருந்து சுமாா் 100 கி.மீட்டா் வேகத்தில் இந்தச் சோதனை ரயில் இயக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேக சோதனை வெற்றியடைந்தால், நாகை - வேளாங்கண்ணி தடத்தில் ரயில்கள் சுமாா் 60 முதல் 70 கி.மீட்டா் வேகத்தில் இயங்க அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2020-ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் முடங்கியிருக்கும் வேளாங்கண்ணி ரயில் சேவையும், இந்த சோதனைக்குப் பின்னா் தொடங்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...