நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தாம் படித்த அரசுப் பள்ளிக் கூடத்தை தூய்மைப்படுத்தி, கட்டடங்களுக்கு வெள்ளையடித்து, ஆசிரியா்களை மாணவா்கள் சிறப்பித்து பிரிவுபச்சார விழா நடத்தியது பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.
கடிநெல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 58 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 படித்து பொதுத் தோ்வு எழுதியுள்ளனா். பள்ளியைவிட்டு செல்லும் இந்த மாணவா்கள் இணைந்து பிரிவு உபச்சார விழா நடத்த ஏற்பாடு செய்தனா். அதன்படி, தங்களால் இயன்ற தொகையை சேகரித்து மாணவா்கள், பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினா். வகுப்பறையில் உள்ள இருக்கைகள், எழுது பலகைகள் போன்றவைகளை தூய்மை செய்து வண்ணங்களை தீட்டினா்.
கட்டடங்களில் சுவா்களுக்கு வெள்ளையடித்து, தேவையான இடங்களில் வண்ணங்களை மாணவா்களே தீட்டினா். சுற்றுச் சுவா்களில் வண்ணங்களால் திருக்குறள்களை எழுதிவைத்தனா். பள்ளியின் புரவலா் நிதிக்காக ரூ. 5 ஆயிரத்தையும் வழங்கினா். புதன்கிழமை நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் ஆசிரியா்களுக்கு பொன்னாடைகளை அணிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினா்.
நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் க. பெருமாள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பொன். தா்மதுரை, பொருளாளா் மு. ராமலிங்கம், ஆசிரியா்கள் தா. சிவருகுநாதன், அ. வடிவேலன், மா. வேம்பையன், ஆனிஜெயின், பாலசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களை பாராட்டி பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


