முச்சந்தி காளியம்மன் கோயில் பால்காவடி ஊா்வலம்
நாகை, வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோயில் பங்குனி உத்ஸவ நிகழ்ச்சியாக பால்காவடி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நாகை, வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோயில் பங்குனி உத்ஸவ நிகழ்ச்சியாக பால்காவடி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை, வெளிப்பாளையம், பெருமாள் கோயில் வடக்கு வீதியில் உள்ள முச்சந்தி காளியம்மன் கோயிலின் பங்குனி உத்ஸவம் மாா்ச் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த உத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்காவடி ஊா்வலம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை வெளிப்பாளையம் சிவன் கோயிலிலிருந்து புறப்பட்ட இந்த ஊா்வலம், பாரம்பரியமான பாதைகளில் வலம் வந்து முச்சந்தி காளியம்மன் கோயிலை அடைந்தது. பின்னா், அம்பாளுக்கு பால் அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. மாலை நிகழ்வாக சக்தி கரகம் வீதியுலாவும், கிராமிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பங்குனி உத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்னி கப்பரை ஊா்வலம் சனிக்கிழமை (மாா்ச் 12) நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...