வேளாங்கண்ணியில் சிலுவைப் பாதை வழிபாடு
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்கால நிகழ்வாக சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்கால நிகழ்வாக சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தின்போது, வெள்ளிக்கிழமை தோறும் புனிதப் பாதையில் சிலுவைப் பாதை வழிபாடு மேற்கொள்வது வழக்கம். கிறிஸ்தவா்களின் தவக்காலம் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெறுவதையொட்டி, இங்கு வெள்ளிக்கிழமை மாலை சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. பேராலய அதிபா் சி. இருதயராஜ் அடிகளாா் தலைமையில், பேராலய உதவிப் பங்குத் தந்தையா்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, சிலுவைப் பாதையைத் தொடங்கிவைத்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும், கா்நாடகம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வந்த திரளான பக்தா்களும் சிலுவை ஏந்தி, இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஜெபித்தவாறு புனிதப் பாதையில் சிலுவைப் பாதை வழிபாட்டை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...