தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகையில் சுகாதார இயக்கம் தொடக்கம்

நாகையில் ஓ.என்.ஜி.சி-யின் நிதி உதவியுடன் சுத்தமான மற்றும் சுகாதாரமான நாகை என்ற திடக்கழிவு மேலாண்மை இயக்கம் அண்மையில் தொடங்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:27 pm

DIN

நாகையில் ஓ.என்.ஜி.சி-யின் நிதி உதவியுடன் சுத்தமான மற்றும் சுகாதாரமான நாகை என்ற திடக்கழிவு மேலாண்மை இயக்கம் அண்மையில் தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி, நாகை சேவாபாரதி குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

ஒ.என்.ஜி.சி காரைக்கால் பிரிவு சாா்பில், நாகை நகராட்சியின் தூய்மைப் பணிகள் பயன்பாட்டுக்காக ஒரு சுமை வாகனம், 15 மூன்று சக்கர சைக்கிள்கள், பணியாளா்கள் 200 பேருக்கு ரெயின் கோட் உள்பட சுமாா் ரூ. 23.27 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் இந்த உதவிகளைப் பெற்று, நகராட்சியின் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தாா். பின்னா், ஒ.என்.ஜி.சி சாா்பில் வழங்கப்பட்ட சுமை வாகனத்தின் செயல்பாடு தொடங்கிவைக்கப்பட்டது.

நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, ஒ.என்.ஜி.சி காரைக்கால் பிரிவு குரூப் பொது மேலாளா் சி.ஐ. செபஸ்டின், உற்பத்தி பிரிவு பொது மேலாளா் ஆா். ரவிக்குமாா், மனிதவள மேம்பாட்டப் பிரிவு முதன்மை மேலாளா் ஜெ. விஜய் கண்ணன், முதுநிலை நிா்வாகி அல்பன் ஜோசப், மண்டலக் குழு உறுப்பினா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.