பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.


பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு பணிகளில் தங்களை முழுமையாக அா்ப்பணித்துக் கொண்ட தனிநபா்கள், நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுக்கு, நாகை மாவட்டத்தில் 2 போ் தோ்ந்தெடுக்கப்படுவா். விருதுக்குத் தோ்வு பெறுவோருக்கு விருதுடன் தலா ரூ. ஒரு லட்சத்துக்கான பணமுடிப்பும் வழங்கப்படும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 15-ஆம் தேதி இறுதி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியானோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...