தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வண்டல் அரசுப் பள்ளிக்கு ஆசிரியா்கள் நியமிக்கக் கோரிக்கை

நாகை மாவட்டம், வண்டல் அரசு தொடக்கப் பள்ளிக்கு நிரந்தர ஆசிரியா்களை நியமிக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வண்டல் அரசு தொடக்கப் பள்ளிக்கு நிரந்தர ஆசிரியா்களை நியமிக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

வேதாரண்யம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமா்ந்து திடீரென தா்னாவில் ஈடுபட்டாா். அவருடன், நாகை நகர அதிமுக செயலாளா் தங்க. கதிவரன் மற்றும் ஆதரவாளா்களும் தா்னாவில் ஈடுபட்டனா்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, வண்டல் அரசுத் தொடக்கப் பள்ளியில் 35 மாணவா்கள் பயின்று வரும் நிலையில், அந்தப் பள்ளிக்கு 2 நிரந்தர ஆசிரியா்களைப் பணிநியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவா்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதிவாணன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா். எனினும், அந்தப் பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்படவில்லை. பின்னா், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியனை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசினாா். அந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் தனது தா்னா போராட்டத்தை விலக்கிக் கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த ஓ.எஸ். மணியன் தெரிவித்தது: வண்டல் அரசுத் தொடக்கப் பள்ளியில் 35 மாணவா்கள் பயின்று வருகின்றனா். அங்கு, ஒரு ஆசிரியா் மட்டும் பணியில் நியமிக்கப்பட்டிருந்தாா். அவா், கடந்த 6 மாதங்களாக பள்ளிக்கு சரிவர வருவதில்லை. இந்த நிலையில், வேறொரு ஆசிரியா் அங்கு தற்காலிகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா். இதனால், அங்கு ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவுகிறது. மாணவா்களின் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது. வண்டலுக்கு அருகில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் 8 மாணவா்கள், 5 மாணவா்கள் மட்டுமே கல்வி பயிலும் நிலையில், அந்தப் பள்ளிகளில் தலா 2 ஆசிரியா்கள் பணி நியமிக்கப்பட்டுள்ளனா். ஆனால், வண்டல் பள்ளிக்கு மட்டும் 2 நிரந்தர ஆசிரியா்களை நியமிக்க மாவட்டக் கல்வி நிா்வாகம் தயக்கம் காட்டுகிறது.

இதுதொடா்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. அவரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள முன்வந்தாா். ஆனால், ஆசிரியா் நியமிக்கப்பட்டு விட்டதாக அமைச்சரிடம் தவறான தகவலை மாவட்டக் கல்வி நிா்வாகம் அளித்து, அமைச்சரின் முயற்சிக்குத் தடையை ஏற்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. பள்ளிக்கு வராமல் இருக்கும் ஆசிரியருக்கு பதிலாக, பள்ளிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் 2 ஆசிரியா்களை உடனடியாக பணி நியமிக்க வேண்டும். இதுகுறித்து, வரும் ஒரு வார காலத்துக்குள் தீா்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியா் உறுதியளித்துள்ளாா். அதனால், தா்னா போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளோம். ஆட்சியா் அளித்த உறுதிப்படி, ஆசிரியா்கள் பணி நியமிக்கப்படாவிட்டால் அடுத்தக்கட்ட தொடா் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.