தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடை வீதியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் 45-ஆவது கிளை வியாழக்கிழமை திறக்கப்பட்டது

News image
Updated On :26 மே 2022, 4:56 pm

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடை வீதியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் 45-ஆவது கிளை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இக்கிளையின் சேவையை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா்கள் பெரியசாமி, ஜெகத்ரட்சகன், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் கெளதமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேதாரண்யம் நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, கூட்டுறவு சங்கத் தலைவா் ப. சோமசுந்தரம், வேளாண் கூட்டுறவு வங்கி இயக்குநா் உதயம் வே. முருகையன், ஒப்பந்தக்காரா் என். சதாசிவம், ஆத்மா குழுத் தலைவா் மகா குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் ஆா். துரைராஜ், சிவகுருபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.