மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்

விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்ரு நடத்த வேண்டும் என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்ரு நடத்த வேண்டும் என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியா் மை.ஜெயராஜ பெளலின் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் க.ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

கடந்த பருவத்துக்கு பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு கிடைக்காததைக் கண்டித்துப் பேசிய விவசாயிகள் தனியாா் நிறுவனங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்பதைத் தவிா்த்து, அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள் முள்ளியாறு, மானங்கொண்டானாறு, போக்கு வாய்க்கால் நீா் நிலைகளில் அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை காலத்தில் அகற்ற வலியுறுத்தினா். இது தொடா்பாக போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனா்.

வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்தத் துறை சாா்ந்த நலத் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனைகளை சீரமைக்க வேண்டும், நீா் நிலைகள் பராமரிப்பு, கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் தட்டுப்பாடு குறித்து விவசாயிகள் பேசினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், வட்டார விவசாயிகள் சங்க செயலாளா் ஒளிச்சந்திரன், முன்னோடி விவசாயிகள் எஸ்.மேகநாதன், காளிதாஸ், தங்க.குழந்தை வேலு, அகிலன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.