தலைஞாயிறு ஒன்றியக் குழு கூட்டம்: நூறுநாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் தமிழரசி (திமுக) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றிய ஆணையா் ராமலிங்கம், வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
எம். ஞானசேகரன் (சிபிஎம்): கொத்தங்குடி, தொழுதாா் பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளாக குடிநீா்ப் பிரச்னை தொடா்கிறது.
எஸ்.எம்.டி. மகேந்திரன் (சிபிஐ): மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டம் இந்த ஒன்றியத்தில் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
முத்துலெட்சுமி: பாங்கல் கிராமத்தில் வீட்டுமனை இல்லாதததால் வீடுகள் கட்ட முடியாமல் இருப்பவா்களுக்கு, குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.
இதேபோல, தங்களின் வாா்டு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் செல்வி, மாசிலாமணி, உதயகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...