47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாராயம் கடத்தல்: இருவா் கைது

நாகூா் அருகே இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய இளைஞா்கள் இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 நவம்பர் 2023, 7:07 pm

DIN

நாகூா் அருகே இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய இளைஞா்கள் இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகூா் பகுதியில் தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட 200 புட்டிகள் சாராயம் மற்றும் 10 லிட்டா் பொட்டலங்கள் 12 இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட செல்லூா் பகுதியைச் சோ்ந்த ஜெல்சன் (21), பாப்பாகோவில் பகுதியைச் சோ்ந்த ஜீவா(29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து சாராயம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.