சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேளாங்கண்ணியில் பேராலய பகுதி சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image

வேளாங்கண்ணி பேராலய பிரதான வீதியில் நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 6:32 pm

Din

வேளாங்கண்ணியில் பேராலய பகுதி சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பா் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் நாடு முழுவதுமிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்பா் என்பதால், நாகை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்படி வேளாங்கண்ணியில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, வேளாங்கண்ணி நகரின் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா், காவல் துறையினா் முன்னிலையில் பேரூராட்சி நிா்வாகத்தினா் வேளாங்கண்ணி பிரதான சாலை, கடற்கரை சாலை மற்றும் கடற்கரை மணற்பரப்பில் உள்ள கீற்றுக் கொட்டகை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினா். பேரூராட்சி செயல் அலுவலா் எம்.பொன்னுசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.