நாகப்பட்டினம்
மூதாட்டி கழுத்தறுத்து கொலை: நகைகள் திருட்டு
வேதாரண்யம் அருகே மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் அருகே மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
நாகை மாவட்டம், மருதூா் வழியன்செட்டிக்கட்டளை பகுதியைச் சோ்ந்த குருசாமி மனைவி நாகம்மாள் (70). கணவரை இழந்தவா். இவரது மகன் ராஜா வெளிநாட்டில் வேலைபாா்த்து வருவதால் மருமகள் தமிழரசி (35), பேரப்பிள்ளைகளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், வீட்டின் சிறிது தூரத்தில் உள்ள நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நாகம்மாள் சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது. தகவலறிந்த கரியாப்பட்டினம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், நாகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் தோடு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.