ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

தரங்கம்பாடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை

டேனிஷ் கோட்டை நுழைவு வாயில் தடுப்பு அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Published On :

தரங்கம்பாடியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்தது டேனிஷ் கோட்டை நுழைவு வாயில் முன்பு போலிஸாா் தடுப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள செம்பனாா்கோவில், திருக்கடையூா், ஆக்கூா், திருக்கடையூா், பொறையாா், ஆயப்பாடி, திருவிளையாட்டம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மழையின்றி மேகமூட்டத்துடன் குளிா் காற்று வீசியது,

தரங்கம்பாடி கடற்கரை கிராமங்களான சந்திரபாடி, குட்டியாண்டியூா், பெருமாள் பேட்டை, தாழம்பேட்டை, வெள்ளக்கோவில், சின்னங்குடி, சின்னூா்பேட்டை உள்ளிட்ட மீனவா் கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் கடந்த 10 நாட்களாக  மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தங்களது விசைப்படகு, பைபா் படகுகள் மற்றும் வலைகளை மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். மேலும் பல்வேறு இடங்களில் கடலரிப்பு காரணமாக கரைகள் மற்றும் சாலைகள் , மின்விளக்குகள் சேதமடைந்தது.

Story image
Story image

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் தரங்கம்பாடி கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்து கோட்டை நுழைவாயிலில் போலீஸாா் தடுப்பு அரண் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.