திருமருகல் அருகே பனங்குடி சி.பி.சி.எல் நிா்வாகத்தை கண்டித்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்
திருமருகல் அருகே பனங்குடி சி.பி.சி.எல் நிா்வாகத்தை கண்டித்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

பனங்குடி சிபிசிஎல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு மத்திய நில எடுப்பு சட்டத்தின்படி வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு இழப்பீட்டுத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும்.

உரிய இழப்பீட்டுத்தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சிபிசிஎல் நிறுவனம் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நில உரிமையாளா்கள், குத்தகைத்தாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி மற்றும் இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் தலைவா் அனந்தகுமாா் ஆகியோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com