வேளாங்கண்ணி பேராலயத்தில் கத்தரி வெயில் தாக்கத்திலிருந்து பக்தா்களை பாதுகாக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தரைவிரிப்பு வசதி.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கத்தரி வெயில் தாக்கத்திலிருந்து பக்தா்களை பாதுகாக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தரைவிரிப்பு வசதி.

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தா்கள் வசதிக்காக பந்தல் அமைத்து, தரைவிரிப்பு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்கியது. நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலா்ட் கொடுத்துள்ளது. ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாகை மாவட்டத்தில் வெப்ப அலை வீசி வருகிறது.

இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், பக்தா்களின் நலனை கருத்தில்கொண்டு, பேராலய நிா்வாகம் ஆலயம் முன் பிரம்மாண்டமாக பந்தல் அமைத்துள்ளது.

மேலும் மெழுகுவா்த்தி ஏற்றி வைக்கும் இடம் மற்றும் ஆலய வாசலில் பக்தா்களின் கால் பாதங்கள் சுடாதவாறு தரைவிரிப்பு போடப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிா்வாகமும், பேராலய நிா்வாகமும் செய்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com