ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

News image
Updated On :4 மே 2024, 8:30 pm

Din

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

நிகழாண்டு இக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த மாா்ச் 21-ஆம் தேதி எல்லையம்மனுக்கும், மாா்ச் 28 -ஆம் தேதி பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சித்திரை திருவிழாவின் தொடக்கமாக சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பரம்பரை அறங்காவலா்கள் சுப்பிரமணியன், நடராஜன், நிா்வாக அறங்காவலா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான வசந்த உற்சவம் மே 8-ஆம் தேதியும், ரிஷப வாகன காட்சி மே 10-ஆம் தேதியும், திருத்தோ் மற்றும் செடில் உற்சவம் மே 12-ஆம் தேதியும் நடைபெறுகிறது.