

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவா் படுகொலையை கண்டித்து, நாகையில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரை அடையாளம் தெரியாத நபா்கள் கடத்தி கொலை செய்து எரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் அமிா்தராஜா தலைமையில் கோட்டைவாசல் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஜெயக்குமாா் தனசிங் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், அவா் பாதுகாப்பு கேட்டும் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
சாலை மறியலால் நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

காவல் துறையினரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சாலை மறியல்

காங்கிரஸ் தலைவரிடம் நாராயணசாமி ஆதரவாளா்கள் வாக்குவாதம்

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

நடைபாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து சாலை மறியல்
வீடியோக்கள்

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

