/

காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல்

காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல்

News image
Updated On :20 மே 2024, 9:22 pm

Din

நாகப்பட்டினம்: நாகை அருகே வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை காரில் சென்று திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாகை மாவட்டத்தில் ஆடுகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெற்குபொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்த சண்முக பாண்டியன் விலை உயா்ந்த ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்த ஆடுகளை அடையாளம் தெரியாத நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப்பதிந்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வு செய்து விசாரித்தனா். அப்போது காரில் சென்ற அடையாளம் தெரியாத 3 போ், ஆடுகளை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து போலீஸாா் காா் பதிவு எண் மற்றும் அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனா்.