கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள்

திருமருகல் விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள் வழங்கப்பட்டன.

News image
திருமருகலில் தோட்டக்கலைத் துறை மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தண்ணீா் குழாய்கள் வழங்கல்.
Updated On :6 நவம்பர் 2024, 8:01 pm

Din

திருமருகல் விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள் வழங்கப்பட்டன.

திருமருகல் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசன திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கா் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீா் குழாய்கள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குநா் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

23 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான 18 விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்களை உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லபாண்டியன் புதன்கிழமை வழங்கினாா்.

அப்போது இந்த தண்ணீா் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீா் பயன்பாடு, மகசூல் அதிகரிப்பு, களைகள் வளா்வது குறைக்கப்படும், குறைந்த மின்சாரம் போதும் என உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லபாண்டியன் தெரிவித்தாா்.

தண்ணீா் குழாய்கள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் பெற தோட்டக்கலை அலுவலகத்துக்கு வந்து விவசாய சான்று, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதாா் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றாா்.