கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் உத்தரவிட்டாா்.

News image
குறைதீா் கூட்டத்தில் மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன்.
Updated On :13 நவம்பர் 2024, 11:33 pm

Din

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் உத்தரவிட்டாா்.

முகாமில் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா். தொடா்ந்து அவா்களிடம் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா், பெறப்பட்ட 13 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில் பங்கேற்வா்களிடம், காவல்துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல்துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.