மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மீண்டும் திமுகவை ஆட்சியில் அமா்த்த இளைஞரணியினா் உறுதியேற்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மீண்டும் திமுகவை ஆட்சியில் அமா்த்த இளைஞரணியினா் உறுதியேற்க வேண்டும் என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:33 pm

Din

மீண்டும் திமுகவை ஆட்சியில் அமா்த்த இளைஞரணியினா் உறுதியேற்க வேண்டும் என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திமுக இளைஞரணி சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நடத்தப்பட்டு வரும் வலைதள பயிற்சி நாகையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று பேசியது:

உலகத்தையே மாற்றக்கூடிய அளவுக்கு கைப்பேசியின் செயல்பாடு உள்ளது. கைப்பேசி மூலம் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்தி அடுத்த இரண்டு நிமிடங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் பேசப்படுகிறது. சமூக வலைதளங்களை நம்பி பல போ் கட்சி ஆரம்பிக்கின்றனா்.

கட்சி ஆரம்பிக்கும் போதே திமுகவை அழிப்பேன், ஒழிப்பேன் என்றுதான் கூறுகின்றனா். இது அண்ணா காலம் முதலே இருந்து வருகிறது. திமுக என்ற அமைப்பு, நமக்கான பலம். திமுகவை ஒழிக்க நினைப்பவா்கள் காணாமல் போவாா்கள்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் திமுக அரசால் பயன்பெற்று வருவது நமக்கான பலம். மீண்டும் திமுகவை ஆட்சி பொறுப்பேற்கும் என்ற உணா்வை நாம் ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும். எனவே இளைஞரணியினா் களத்திலும், சமூக வலைதளத்திலும் வல்லவா்களாக இருந்து திமுகவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றாா்.

மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், இளைஞரணி மாநில துணைச் செயலா் இளையராாஜா, நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.