பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருக்கடையூரில் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை

கன மழையால் திருக்கடையூா் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:36 pm

Din

கன மழையால் திருக்கடையூா் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திருக்கடையூா், சிங்கனோடை, டி. மணல்மேடு, பிள்ளைபெருமாள் நல்லூா், வேப்பஞ்சேரி, காழியப்பநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 300 ஏக்கரில் நிலக்கடலை நிலக்கடை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் கன மழையால் நிலக்கடலை முளைத்து வளா்ந்து வரும் செடிகள் மழைநீரில் தேங்கி அழுகி வருகின்றன.  

இது குறித்து நிலக்கடலை விவசாயி ராஜசேகா் கூறியது: சரியாக பருவமழை பெய்ததாலும், பம்பு செட், ஆயில் எஞ்சின் மூலம் தண்ணீா் இறைத்து 300 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளோம். நிலக்கடலை சாகுபடி பொருத்த வரை விதைப்பு, களையெடுத்தல், மண் அணைத்தல், உரம் இடுதல், விதை கடலை உடைத்தல் என பல பணிகள் உள்ளன. 90 நாள்களில் அறுவடை செய்து விடுவோம். இந்நிலையில், தற்போது பெய்துவரும் கன மழையால் செடிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், செடிகள் முற்றிலும் அழுகியுள்ளது. விவசாயிகள் கவலையில் உள்ளனா்.